யாழ் மாநகர சபையின் பதில் முதல்வராக துரைராசா ஈசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ் மாநகர சபையின் முதல்வராக பதவி வகித்த வி. மணிவண்ணன் 2022 டிசம்பர் 31ஆம் திகதி பதவி விலகினார்.
இதையடுத்து யாழ் மாநகர முதல்வர் பதவி வறிதானது. இதையடுத்து ஜனவரி 19ஆம் திகதி முதல்வர் தெரிவு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், யாழ். மாநகர சபையின் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வசதியாக பிரதி முதல்வர் து. ஈசன் பதில் முதல்வராக உள்ளூராட்சி ஆணையாளரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

