31.7 C
Colombo
Sunday, November 29, 2026

கோட்டபாய ராஜபக்ஷ இரண்டாம் தடவையாக நிகழ் நிலையில் சாட்சியம்!

லலித், குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு விசாரணையில் முன்னாள் ஜனாதிபதியும், அப்போதைய பாதுகாப்பு செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷவிடம் மூன்றாவது தடவையாக நிகழ் நிலையில் சாட்சியம் பெற வழக்கு அடுத்த வருடம் பெப்ரவரி 12ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

காணாமல் போன லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் காணாமல் போன சம்பவங்கள் தொடர்பான விசாரணை, யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் செ.லெனனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

நேற்று வெள்ளிக்கிழமை இரண்டாவது தடவையாகவும் முன்னாள் ஜனாதிபதியும் அந்தச் சம்பவம் நிகழ்ந்த காலப்பகுதியில் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ சாட்சியாக நீதிமன்றத்தில் நிகழ்நிலையில் சாட்சியமளித்தார்.

இந்த வழக்குக்கு உட்பட்ட நபர்களின் காணாமல் போதல்களுக்குரிய காலப்பகுதியிலேயே, காணாமல் போதல்கள், கடத்தல்கள் மற்றும் தாக்குதல்களுக்குள்ளான நபர்களின் சம்பவங்கள், அதேபோல் குமார் குணரத்தினம் போன்றோரின் கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக, கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் அவரிடம் இருந்த தொடர்பு மற்றும் அவருக்கு இருந்த அறிவு ஆகியவை குறித்து நீதிமன்ற வழக்கில் கேள்வி எழுப்பபட்டது.

பல விடயங்கள் தொடர்பாக தனக்குரிய காலப்பகுதியில் நிகழ்ந்த விடயங்கள் குறித்து நினைவு இல்லை என்றே பல கேள்விகளுக்கு கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் சில ஆவணங்கள் அடையாளப்படுத்தப்பட்டன, மேலும் அந்த ஆவணங்கள் தொடர்பாக சாட்சியாளர் கோட்டபாய ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்தப்பட்டது. சாட்சியாளரால் அடையாளம் காண முடியாத சில ஆவணங்களுக்கு, சாட்சியாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஆட்சேபனை தெரிவித்தார்.

அதற்கமைய, சாட்சியப் பதிவை நீதிமன்றம் 2027 பெப்ரவரி 12 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது. அதன்படி, இந்தச் சாட்சியாளரான கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் பெப்ரவரி 12 ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் முன்னிலையில் நிகழ்நிலையில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles