31.7 C
Colombo
Sunday, November 29, 2026

காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பில் எனக்கு பொறுப்பு அல்ல – கோட்டாபய ராஜபக்ஷ

காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பில் அந்த பொலிஸ் நிலையத்திற்கே பொறுப்பு. அது பாதுகாப்பு செயலாளராக தனது பொறுப்பு அல்ல என முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்ட லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பான விசாரணை, யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் செ.லெனின்குமார் முன்னிலையில் நேற்று நடைபெற்ற போது இரண்டாவது தடவையாகவும் கோட்டாபய ராஜபக்ஷ நிகழ்நிலையில் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில் குறித்த விடயம் தொடர்பில் சட்டரீதியாக இறுதி தீர்மானம் எடுக்கும் பொறுப்பு உண்டு . காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பில் அந்த பொலிஸ் நிலையத்திற்கே பொறுப்பு. எனது பொறுப்பு அல்ல.

இது தொடர்பில் பாதுகாப்பு படை அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான விடயத்தில் ஜனாதிபதியின் அதிகாரத்தை பெற்று செயல்படுத்தும் பொறுப்பு எனக்கு இருந்தது.

காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பில் நான் தலையீடு செய்வதில்லை. இவ்வாறான விடயம் தொடர்பில் எனக்கு அறிவிக்கப்படும் போது அந்த விடயம் தொடர்பில் செயல்படுத்துமாறு புலனாய்வு பிரதானிக்கு அறிவிப்பேன். பல வருடங்கள் முன்பு நடந்த நிகழ்வுகள் பற்றி எனக்கு ஞாபகம் இல்லை – என்றார்.

ஊடகவியலாளர்களான கீத் நொயார், போத்தல ஐயந்த மற்றும் குமார் குணரட்ணம் உள்ளிட்ட சிலரின் கடத்தல் சம்பவம் தொடர்பாக அறிந்த தெரிந்த விடயங்கள் பற்றி சட்டத்தரணி நுவான் போபகேவால் கோட்டாபய ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பி சாட்சி பெறும் நடவடிக்கை இடம்பெற்றது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles