33.4 C
Colombo
Sunday, November 29, 2026

தமிழ்த் தேசிய கட்சிகளின் கூட்டணி இணக்கம் காணுமா?

பல்வேறுபட்ட தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றாக கூட்டணி அமைத்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில்
களமிறங்க தீர்மானித்துள்ளது.

ஆனாலும் கட்சிகளுக்கிடையே பல்வேறு சின்னங்கள் பற்றி ஆராயப்பட்டாலும் பொதுச் சின்னம் ஒன்றை கொண்டு வந்து உடன்பாட்டை ஏற்படுவதில் உள்ள
தாமதம் காரணமாக கூட்டணி அறிவிப்பு தாமதமாகி வருகின்றன.

க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), த.சித்தார்த்தன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்), சுரேஸ் பிரேமச்சந்திரன்
தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்), என்.சிறிகாந்தா தலைமையிலான தமிழ் தேசிய கட்சி என்பனவே புதிய கூட்டணியாக உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ளவுள்ளன.

மேலும் யாழ் மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையிலான அணி உள்ளிட்ட மேலும் சில தரப்புகள் ஒன்றாக போட்டியிட இணக்கம் கண்டுள்ளதாக தெரியவருகிறது.

இலங்கை தமிழரசுக் கட்சி தனியாக போட்டியிட தீர்மானித்துள்ளதால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிகளான ரெலோ,புளொட் ஆகியன மேலும் சில கட்சிகளுடன் இணைந்து எதிர்கொள்ள முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில்,இன்றைய தினம்  வியாழக்கிழமை (12) இடம்பெறவுள்ள கூட்டத்தில் , கூட்டணியின் பெயரையும்,
சின்னத்தையும் தீர்மானிக்க கட்சிகள் முடிவெடுத்துள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles