விஞ்ஞான பீடத்தின் இரசாயனவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவரைச் சிரேஷ்ட பேராசிரியராகவும், முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் மனிதவள முகாமைத்துவத் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரைப் பேராசிரியராகவும் பதவி உயர்த்துவதற்கே பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் நேற்று – நவம்பர் 28 ஆம் திகதி சனிக்கிழமை துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி தலைமையில் நடைபெற்றது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமையத் திறமை அடிப்படையில் சிரேஷ்ட பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த விஞ்ஞான பீடத்தின் இரசாயனவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஜே.பி. ஜெயதேவன் மற்றும் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் மனிதவள முகாமைத்துவத் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான
அவற்றின் அடிப்படையில், விஞ்ஞான பீடத்தின் இரசாயனவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஜே.பி. ஜெயதேவன், இரசாயனவியலில் சிரேஷ்ட பேராசிரியராகவும், முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் மனிதவள முகாமைத்துவத் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஆறுமுகம் சரவணபவன், மனிதவள முகாமைத்துவத்தில் பேராசிரியரா

