28.9 C
Colombo
Saturday, October 10, 2026

விக்னேஸ்வரனை போல மூன்று மாதத்திற்கு ஒருமுறை கொள்கை மாற்றுபவர்கள் அல்ல நாம் – சாணக்கியன் எம்.பி.

காணொளியாக பார்க்க……

https://fb.watch/peEeDB8wDn/?mibextid=RtaFA8

விக்னேஸ்வரனை போல மூன்று மாதத்திற்கு ஒருமுறை கொள்கை மாற்றுபவர்கள் அல்ல நாம் என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தொடர்சியாக மக்களுக்காக ஒரே பாதையில் பயணிப்போம் என தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று(29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சாணக்கியன் இவ்வாறு தெரிவித்தார்

மேலும் தெரிவிக்கையில், அண்மையில் க.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும் அவரை போல நாம் நேரத்திற்கு நேரம் மூன்று மாதத்திற்கு ஒருமுறை கொள்கை மாற்றுபவர்கள் கிடையாது. எடுத்த முடிவில் எமது கட்சி இறுதிவரை செயற்படும்.

இதேவேளை தமிழ் தரப்புக்களிற்கு தீர்வினை வழங்குவதாக கூறுகின்ற ரணில் விக்கிரமசிங்க தொடர்ச்சியாக மார்ச் மாதம் தீர்வு திட்டத்தினை வழங்குவதாக பொய்யுரைத்துள்ளார். இவ்வாறான நிலையில் பல ஏமாற்றங்கள் இருந்தாலும் நாம் சந்திப்புக்களில் கலந்து கொள்கின்றோம்.இதன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் பல விடயங்களை என்னால் முன்னெடுக்க முடிகின்றது.

தேர்தலினை நடாத்துவது தொடர்ச்சியாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மூலம் நிதி ஒதுக்கீட்டினை மேற்கொண்டு தேர்தல் அரசியலை மேற்கொள்ளவுள்ளார். குறிப்பாக மட்டகளப்பு மாவட்டத்தில் வீதிகளில் கூட மோசடிகள் இடம்பெறுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles