மலையக மக்கள் இலங்கைக்கு வந்து இருநூறு ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் கிளிநொச்சியில் மலையகம் 200 நிகழ்வு சனிக்கிழமை(30) காலை 10 மணிக்கு கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில், இந்திய தமிழ்த் தொலைக்காட்சியான சீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமப நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற கில்மிஷா மற்றும் அப்போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக பாடிய அசானி ஆகியோரும் கௌரவிக்கப்படவுள்ளனர்.
குறித்த நிகழ்வை சிறப்பிக்க அனைத்து அரசியல் கட்சிகள், மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் சமூக செயற்பாட்டாளர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,வர்த்தக சமூகத்தினர் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறு விழா ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கில்மிஷாவின் நேர்காணலை பார்க்க…..

