24.5 C
Colombo
Wednesday, October 7, 2026

டிவில்லியர்ஸ்,மக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டம் ! வெற்றியை பதிவு செய்த ரோயல் சேலஞ்சர்ஸ்

நேற்றைய முதல் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக் கொண்டது இப்போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் செலஞ்சர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து அதன்படி ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய அணியின் தலைவர் விராட் கோலி மற்றும் படிக்கல் ஆகியோரால் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. விராட் ஐந்து ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தார் அதன்பின்னர் களம் புகுந்த படித்டார் ஒரு ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க தொடர்ந்து களமிறங்கிய மாக்ஸ்வெல் படிக்கலுடன் இணைப் ஆட்டத்தை தொடர்ந்தார் அதுவரை நிதானமாக ஆடி வந்த படிக்கல் 25 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். அதன்பின் மைதானத்துக்குள் நுழைந்த ஏ.வி வில்லியர்ஸ் மாக்ஸ்வெல்லுடன் இணைந்து அதிரடியால் மிரட்டினார்கள். இதன் காரணமாக காரணமாக 20 ஓவர்கள் நிறைவில் 204/4 என்ற இமாலய இலக்கினை நிர்ணயித்தது. துடுப்பாட்டத்தில்
மாக்ஸ்வெல்- 78 (49) 4s*9, 6s* 3
டீவில்லியர்ஸ் – 76* (34) 4s*9,6s*3 ஓட்டங்களை பெற்றனர்.
பந்து வீச்சில் கொல்கத்தா சார்பில் சக்கரவர்த்தி 39/2 (4) விக்கெட்டுக்களையும் ,கமின்ஸ்,பிரசித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்!
பதிலுக்கு 205 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆரம்பத்திலிருந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது எனினும் அனைத்து வீரர்களும் நிலையாக நின்று ஆட முடியவில்லை.இதனால் நிலையான இணைப்பாட்டத்தை ஏற்படுத்த முடியவில்லை .இந் நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 166/8 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிந்தது துடுப்பாட்டத்தில் ரணா 18(11) 4s*2,6s*1 ,கில் 21(9) 4s*2,6s*2 ,த்ரிப்பதி 25(20) 4s*5, மோகன் 29(23) 4s*1,6s*2 ,சகிப் 26(25)4s*1,6s*1, ரசல் 31(20)4s*3,6s*2 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் ரோயல் செலஞ்சர்ஸ் அணியின் சார்பில் ஜெமிசன் 41/3(3) விக்கெட்டுகளையும் சஹால்,பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வாசிங்டன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினார்கள். இதன் மூலம் ரோயல் சேலஞ்சர்ஸ் அணி 38 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. போட்டியின் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles