25.2 C
Colombo
Monday, October 12, 2026

யாழ்ப்பாணத்தை வைத்து எழுதப்பட்ட “பிரதர்லெஸ் நைட்” நாவல் பற்றிய உரையாடல்!

எழுத்தாளர் வாசுகி கணேசானந்தனின் பிரதர்லெஸ் நைட் நாவல் பற்றிய உரையாடலொன்று சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

இலங்கையினைப் பூர்வீகமாகக் கொண்டவரும், அமெரிக்காவில் வசிப்பவருமான எழுத்தாளர் வாசுகி கணேசானந்தனின் பிரதர்லெஸ் நைட் (Brotherless Night) என்ற 2023 இல் வெளியாகிய நாவல் பற்றிய கலந்துரையாடலொன்று நாளை வியாழக்கிழமை (01) பிற்பகல் 4 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு அருகில் உள்ள தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்விலே நாவலாசிரியர், நாவலில் இருந்து ஒரு பகுதியினை வாசிப்பார். அதனைத் தொடர்ந்து நாவல் பற்றிய உரையாடல் இடம்பெறும்.

யாழ்ப்பாணத்தினை மையமாக வைத்து எழுதப்பட்ட வாசுகி கணேசானந்தனின் பிரதர்லெஸ் நைட் 1970களின் நடுப்பகுதியில் எழுச்சி பெற்ற தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் வரலாற்றினைச் சித்தரிக்கும் ஒரு நாவலாக அமைகிறது.

நியூயோர்க் டைம்ஸின் நூல் விமர்சன ஆசிரியரின் தெரிவுகளில் (New York Times Review Ector’s Choice) ஒன்றாக விளங்கும் இந்த நாவல், தேசிய பொது வானொலியின் (National Public Radio) 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த நாவலுக்கான பரிசினையும் பெற்றுள்ளது. நாவலின் ஆசிரியர் அமெரிக்காவில் உள்ள மின்னேசோட்டா பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகக் கடமையாற்றுகிறார்.

இந்த உரையாடல் நிகழ்வினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் ஆங்கிலத் துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் மகேந்திரன் திருவரங்கள் நெறியாள்கை செய்வார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles