காணொளியாக பார்க்க…….
https://fb.watch/pVs_CPYB2S/?mibextid=RtaFA8
வரலாற்று பிரசித்தி பெற்ற மல்லாகம் பெரியதம்பிரான் ஆலயத்தில் சங்காபிஷேகம் நேற்று வெகுசிறப்பாகவும் பக்தி பூர்வமாகவும் இடம்பெற்றது.
ஆலயத்தில் இடம்பெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து பெரிதம்பிரான் பெருமானுக்கு விசேட பால் அபிசேஷகம் இடம்பற்றது.
அதனை தொடர்ந்து பிராதான கும்பங்கள் தவில் நாதஸ்வரம் முழங்க உள்வீதி வளம் வந்து பெரியதம்பிரான் பெருமானுக்கு சங்காபிஷேகம் இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் பெருமளவிலான அடியவர்கள் கலந்துகொண்டு பெரியதம்பிரானின் அருள் கடாசத்தினை பெற்றுக்கொண்டனர்.

