31.7 C
Colombo
Sunday, November 29, 2026

காரைநகரில் திருட்டு – இருவர் கைது!

வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்குவைத்து காரைநகரில்
மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (14) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
காரைநகரிலுள்ள வீடொன்றில் 1600 கனேடிய டொலர், ஒரு சோடி காப்பு மற்றும் கடவுச்சீட்டு என்பனவும் மற்றொரு வீட்டில் 400 அமெரிக்க யூரோ மற்றும் இலங்கை மதிப்பிலான ஒரு இலட்சம் ரூபா என்பனவும் களவாடப்பட்டன.
இதுதொடர்பில் வீட்டின் உரிமையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை துரிதப்படுத்தியிருந்தனர்.
விசாரணைக்கமைய காரைநகரைச் சேர்ந்த 26 மற்றும் 27 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேநபர்களிடமிருந்து களவாடப்பட்ட பணம், நகை என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேநபர்களை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles