31.7 C
Colombo
Sunday, November 29, 2026

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மேல் பறந்த ட்ரோன்!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலாக ட்ரோன் புகைப்படக் கருவி பறந்தமையால் சிறைச்சாலை வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலாக நேற்று இனம் காணப்படாத ட்ரோன் புகைப்படக் கருவி ஒன்று குறிப்பிட்ட சில நிமிடங்கள் வட்டமிட்டது. ட்ரோனை எங்கிருந்து வந்தது என்பதை அவதானிப்பதற்குள் அங்கிருந்து அகன்றதனால் பெரும் பரபரப்பு நிலவியது.

இதேநேரம் இந்த ட்ரோனை இயக்கியவர்கள் தொடர்பில் கண்டறியுமாறு சிறைச்சாலை நிர்வாகத்தால் உடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதோடு சிறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.

இதன்பின்பு இடம்பெற்ற தேடுதலின்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அமைக்கப்படும் பாலங்கள் தொடர்பில் கண்காணிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட ட்ரோன் புகைப்படக் கருவி என கண்டறியப்பட்டது.

பாலங்களை கண்காணிக்க அனுமதி பெறப்பட்டபோதும் சிறைச்சாலையின் மேலாக இயக்கியமைக்காக ட்ரோன் புகைப்படக் கருவியை இயக்கியவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles