31.7 C
Colombo
Sunday, November 29, 2026

யாழ் பல்கலைக்கழகம் முன்பாக உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலையொட்டி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

யாழ் பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக காலை முதல் மாலை குறித்த அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 12 நாட்கள் பசி இருந்து தாயக மண்ணுக்காக தன்னுயிரை தியாகம் செய்த தியாகதீபம் திலீபன் அவர்களது 39ஆவது வருட நினைவு தினத்தையொட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் இந்த அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles