31.7 C
Colombo
Sunday, November 29, 2026

விரைவில் கிளிநொச்சி பல்கலைக்கழகம்!

கிளிநொச்சி பல்கலைக்கழகம் விரைவில் உருவாகும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகர் வளாகத்தில் பொறியியல் துறையின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு ஒர் பொறியியல் துறை தேவையென பேராசிரியர் துரைராஜாவின் முப்பத்தி மூன்று வருட கனவு நிறைவு பெற்று , இன்று பல ஆயிரம் மாணவர்களை பிரசவித்துவிட்ட கிளிநொச்சி பொறியியல் பீடம் அதனுடன் இணைந்த தொழில் நுட்ப பீடம் மற்றும் விவசாய பீடம் உள்ளடங்கிய யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் கிளிநொச்சி வளாகம் எதிர்காலத்தில் கிளிநொச்சி பல்கலைக்கழகமாக மாறும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் கிளிநொச்சி அறிவியல்நகர் பெறியியல் பீடம் உருவாகியதன் பழைய நினைவுகளையும் நினைவு கூர்ந்தார்.

குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா, பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles