யாழ்ப்பாணம் – கோண்டாவில் உப்புமடம் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி வாகனத்தில் பனை மர குற்றிகளை ஏற்றிச் சென்றவர் கைது செய்யப்பட்டார்.
இரண்டு லட்சம் ரூபாய் பெறுமதியான 55 பனை மரக் குற்றிகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டது.
யாழ்ப்பாண பிராந்திய புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சட்ட நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டார்.

