மருத்துவ பயன்பாட்டிற்காக கஞ்சாவை பயிரிடுவதற்கும் ஏற்றுமதி செய்வதற்கும் இலங்கையின் அமைச்சரவை இன்று திங்கட்கிழமை, அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த தகவலை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
உள்ளூர் முதலீட்டாளர்கள் மற்றும் முதலீட்டு சபை (BoI) மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இதில் பங்கேற்பதற்கு தகுதியுடையவர்கள் என்று சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

