யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி தேக்க மரப் பலகைகளை சட்டவிரோதமாக கொண்டுவந்தவர் இன்று (05) கைது செய்யப்பட்டார்.
காணொளியாக பார்க்க…..
https://fb.watch/q0GKm6YNd1/?mibextid=RtaFA8
வன்னிப் பகுதியில் இருந்து லொறியில் தேக்க மரப் பலகைகள் கொண்டுவரப்பட்ட போதே காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கைப்பற்றப்பட்ட பொருட்களும் சந்தேக நபரும் அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

