31.7 C
Colombo
Sunday, November 29, 2026

வடக்கு ஊடகவியலாளர்களையும் ஊடகத் தொழிலையும் ஜனாதிபதி அனுர கேவலப்படுத்துகிறார்!

ஜனாதிபதி ஊடகப் பிரிவு தருகின்ற செய்திகளை தான் இங்கு உள்ள ஊடகவியலாளர்கள் பிரசுரிக்க வேண்டும் என்று ஜனாதிபதி நினைப்பது வடக்கில் உள்ள ஊடகவியலாளர்களையும் ஊடகத் தொழிலையும் கேவலப்படுத்தி மரியாதை குறைவாக பார்ப்பதாக அமையும் என யாழ் ஊடக அமையத்தின் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான குமாரசாமி செல்வக்குமார் தெரிவித்தார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி மறைந்த இளம் ஊடகவியலாளரான ஞானப்பிரகாசம் பிரகாஷின் நான்காவது ஆண்டு நினைவேந்தல் யாழ் ஊடக அமையத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்ட போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பங்கேற்ற நிகழ்வுகளில் ஊடகவியலாளர்கள் மட்டுப்பாடுகள், நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பங்கேற்கும் நிகழ்வைத் தவிர வேறு சம்பவங்கள் அங்கு இடம்பெறுமாக இருந்தால் அதை நிச்சயமாக வடக்கு ஊடகவியலாளர்கள் பார்த்து செய்தியாக்குவார்கள் என்ற கோணத்தில் அவர்கள் ஊடகவியலாளர்களை மறுத்திருக்கிறார்கள். ஜனநாயக நாடு என்று சொல்லும் அரசாங்கம் உண்மையிலேயே ஜனாதிபதியின் நிகழ்வுகளில் அனைத்து ஊடகவியலாளர்களையும் அனுமதித்திருக்க வேண்டும்.

போர்க்காலத்தில் இருந்து இன்று வரை ஊடகத் தொழிலை தரமாக மேற்கொள்ளும் வடக்கு ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களை தெற்கு அரசியல்வாதிகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்கள் அச்சப்படுகின்றார்கள்.

எமது தொழிலுக்கப்பால் மக்களின் வலிகளையும் வேதனைகளையும் வெளியில் சொல்ல வேண்டும். அதன் ஊடாக மக்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நாம் தொடர்ந்து பயணிக்கிறோம். அதுக்காகவே பிரகாஷிம் தொடர்ந்து செயல்பட்டார்.

தமிழ் ஊடகவியலாளர்களுக்கு இடம்பெற்ற அநீதிகள் மற்றும் கொலைகள், காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக இதுவரை மாறி மாறி அரசாங்கம் எதுவுமே நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் தொடர்ச்சியே நேற்று நடந்த சம்பவம் – என்றார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles