25 C
Colombo
Saturday, October 10, 2026

ரஜினி ரசிகர்களுக்கு தைப்பொங்கலில் வெளியாகும் குஷியான செய்தி!

ரஜினி நடித்து வரும் ‘வேட்டையன்’ படத்தின் புதிய போஸ்டர் தைப்பொங்கல் தினமான இன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘ஜெயிலர்’ வெற்றிக்குப் பிறகு ஞானவேல் இயக்கும் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அவரது 170-வது படமான வேட்டையனில், அமிதாப் பச்சன், பஹத்பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்ற நிலையில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. இதற்காக ரஜினி மற்றும் படக்குழுவினர் மும்பை சென்றனர். அங்கு, ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. தற்போது புதுச்சேரியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘வேட்டையன்’ படத்தின் புதிய போஸ்டர் காலை 9.15 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

‘வேட்டையன்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!

‘வேட்டையன்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles