25 C
Colombo
Thursday, October 8, 2026

அயலகத் தமிழர் தின நிகழ்வில் அசானி பங்கேற்பு!

இந்தியாவின் தமிழகத்தில் நடைபெற்ற அயலகத் தமிழர் தின நிகழ்வின் போது மலையக குயில் அசானி பங்கேற்றார்.

தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை மூன்றாம் ஆண்டாக ‘தமிழ் வெல்லும்’ என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு மாபெரும் அயலகத் தமிழர் தின விழா சென்னையில் நடந்தது.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ஜனவரி 11 மற்றும் 12ம் திகதிளில் இரு நாட்கள் நடைபெற்றது.

இந்த விழாவில் இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளிலிருந்து தமிழ் வம்சாவழியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதன்போது தமிழகத்திற்கு சென்ற அசானியும் பங்கேற்றார். இது தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles