31.7 C
Colombo
Sunday, November 29, 2026

கில்மிஷா மற்றும் அசானிக்கு பிரபல தென்னிந்திய பாடகர் வழங்கிய அறிவுரை

பாடல் போட்டியில் வெற்றி பெறுவது என்பது முடிவல்ல. அது ஆரம்பம் என தெரிவித்த பிரபல தென்னிந்திய பாடகர் பாலக்காடு ஸ்ரீராம் அசானி கில்மிஷா ஆகியோர் முறைப்படி சங்கீதம் கற்று தொடர்ந்து இசைத்துறையில் பயணித்து சாதிக்கவேண்டும் – என்றார்.

யாழ் ஊடக அமையத்தில் புதன்கிழமை (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே,தென்னிந்தியாவின் பிரபல பாடகரும் புல்லாங்குழல் இசைக் கலைஞருமான பாலக்காடு ஸ்ரீராம் இதனை தெரிவித்தார்.

காணொளியாக பார்க்க…….

https://fb.watch/plRfz97Vdd/?mibextid=RtaFA8

மேலும் தெரிவிக்கையில், தொலைக்காட்சி பாடல் போட்டிகளில் வெற்றி பெறுவது என்பது பெரிய விடயம். அங்கும் முன்னரை போல் அல்லாமல் பல பிரச்சனைகள் உள்ளது.நானும் சில போட்டிகளில் நடுவராக இருந்துள்ளேன்.

பாடல் போட்டியில் வெற்றி பெறுவது என்பது முடிவல்ல. இது ஆரம்பம். ஆகவே முறைப்படி சங்கீதம் கற்று தொடர்ந்து இசைத்துறையில் பயணித்து சாதிக்கவேண்டும்.

அதுவும் இங்கிருந்து வந்து இந்தியாவில் சாதிப்பது கடினம். அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றார்.

ரகுமானின் இசையில்”உயிரே” படத்தில் “தையா தையா” பாடல் மூலம் அறிமுகமான பாலக்காடு ஶ்ரீராம் , படையப்பா படத்தில் “மின்சார பூவே” மற்றும் “வெற்றி கொடி கட்டு”, தாஜ்மஹால் படத்தில் “திருப்பாச்சி அருவாள” பாடல், சாமி படத்தில் “திருநெல்வேலி அல்வாடா” பாடல், மன்மதன் படத்தில் வரும் “வானமுன்னா பொறுமை காட்டு” பாடல் தொடங்கி, அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தில் வரும் “ராட்சச மாமனே” என்கின்ற பாடல் வரை எல்லாம் அவர் பாடிய பாடலே என்பது குறிப்பிடத்தக்கது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles