சரிகமப லிட்டில் சம்பியன் பாடல் போட்டியில் பங்குபற்றியதற்கு பின்னர் பாடல் பாடுவதற்காக நிறைய வாய்ப்புகள் வந்துள்ளன என அசானி தெரிவித்தார்.
அண்மையில் இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனை தெரிவித்தார்.
தென்னிந்திய சினிமா வாய்ப்பு மற்றும் பாடல் வாய்ப்பு தொடர்பாக கேள்வியெழுப்பியபோது பாடுவதற்கான வாய்ப்புக்கள் நிறையவே கிடைக்கின்றன.
துபாய் கனடா போன்ற நாடுகளுக்கு சென்று அங்கு இசை நிகழ்ச்சிகளில் நானும் கில்மிஷாவும் பங்கேற்க வேண்டும் என பலரும் தெரிவித்தனர் – என்றார்.

