32.2 C
Colombo
Sunday, October 4, 2026

திருநெல்வேலியில் வாள் வெட்டு – ஒருவர் காயம்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து, ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருநெல்வேலி சந்தையில் கூலி தொழில்புரியும், கொக்குவில் பகுதியை சேர்ந்த இருவர் மதுபோதையில் தர்க்கப்பட்ட நிலையில், ஒருவர் மற்றையவர் மீது சரமாரியாக வளர வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் தாக்குதலாளியை மடக்கி பிடித்ததுடன்,தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்தவரை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்ப்ட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸாரிடம் தாக்குதலாளியை ஒப்படைத்தனர்.

தாக்குதலாளியை கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை திருநெல்வேலி சந்தை பகுதியில், சந்தை முடிவடைந்த பின்னர், சந்தையில் கூலி தொழில் செய்வோர் போதையில் அட்டகாசம் புரிவதாகவும், அதனால் சந்தை கட்டட தொகுதிகளில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுப்பதனால், அது தொடர்பில் கோப்பாய் பொலிஸார் அவதானம் செலுத்தி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles