1983 கறுப்பு யூலை கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை (23) அனுஷ்டிக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் முனியப்பர் கோவில் முன்பாக நினைவேந்தல் நடைபெற்றது.
இதன்போது நினைவேந்தல் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு ஏனையவர்களும் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இதேவேளை காரைநகர் வலந்தலை மடத்துகரை முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையின் ஏற்பாட்டில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தலைமையில் கறுப்பு யூலை நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

