வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா உடன் அமுலுக்கு வரும் வகையில் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு வைத்திய அதிகாரியாக இணைய சுகாதார அமைச்சினால் பணிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை தொடர்பாக தற்போது நடைபெற்று வரும் முதற்கட்ட விசாரணைக்கு உட்பட்டு, மேற்படி விசாரணை செயல்முறையை எளிதாக்கும் வகையில், பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், மறு அறிவித்தல் வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், நீங்கள் தற்காலிகமாக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு வைத்திய அதிகாரியாக இணைக்கப்பட்டுள்ளீர்கள் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சுகாதார அமைச்சு எனது மருத்துவ நிர்வாகத்தை பறித்து, பேராதனை போதனா வைத்தியசாலைக்கு வைத்திய அதிகாரியாக தரமிறக்கியுள்ளது, சுகாதார அமைச்சின் குறைபாடுகளை வெளிப்படையாக விவாதித்த ஒருவருக்கு இது முறையான தண்டனையாக நான் கருதுகிறேன். ஊழலை வெளியில் கொண்டு வந்ததற்காக பரிசு வழங்கப்படுகிறது.
ஊழல் செய்த அனைத்து நபர்களும் இன்னும் பல தசாப்தங்களாக அவர்கள் செய்து வரும் விஷயங்களை மறைத்து வருகின்றனர், ஆனால் உண்மையை உரக்கப் பேசுபவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் – என அர்ச்சுனா இராமநாதன் சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மருத்துவ அத்தியட்சகராக செயற்பட்ட இராமநாதன் அர்ச்சுனா தற்போது தரமிறக்கப்பட்டு சாதாரண வைத்திய அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

