24.5 C
Colombo
Tuesday, October 13, 2026

மோட்டார் சைக்கிளை பார்க்க ஆசையாக இருந்ததால் திருடிச் சென்றேன் – யாழில் கைதான சந்தேக நபர் வாக்குமூலம்

மோட்டார் சைக்கிளை பார்க்க ஆசையாக இருந்தது. அதனால் அதனை திருடிச் சென்றேன் என யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கைதான சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சந்தேகநபரை இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த மாதம் 26ம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரேமதிலக தலைமையிலான பொலிஸார் 24 வயதான சந்தேகநபரை சாவகச்சேரி பகுதியில் கைது செய்தனர்.

சந்தேகநபரிடம் இருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிளும் ஒரு கிராம் 30 மில்லிகிராம் அளவான ஹெரோயினும் மீட்கப்பட்டது.

யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கொன்றுக்கு வருகை தந்தபோது “வெளியே நின்ற மோட்டார் சைக்கிளை பார்க்க ஆசையாக இருந்தது. அதனால் அதனை திருடிச் சென்றேன்” என  சந்தேக நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம்  அளித்துள்ளார்.

விசாரணைகளுக்கு பின்னர்
சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles