33.4 C
Colombo
Sunday, November 29, 2026

நாவாந்துறையில் மின் ஒழுக்கு காரணமாக வீடு ஒன்றின் மேல்தளம் முற்றாக எரிந்து நாசம்!

காணொளியை பார்க்க……

https://www.facebook.com/share/v/fqKJ9brWPZVDSvQr/?mibextid=oFDknk

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் மின் ஒழுக்கு காரணமாக வீடு ஒன்றின் மேல்தளம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் உரிமையாளர் வேலைக்கு சென்று வந்து திரும்பி பார்த்த வேலை வீடு முற்றாக எரிந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது வீடு எரிந்து கொண்டிருப்பதை அவதானித்த அயலவர்கள் மின்சாரத்தை நிறுத்திவிட்டு தண்ணீரைக் கொண்டு தீ பரம்பலை கட்டுப்படுத்தியுள்ளனர்.

தீப்பரவலில் வீட்டின் மேல் தளம் கட்டில் இரண்டு தொலைக்காட்சி பெட்டிகள், அலுமாரி வீட்டின் ஏனைய உபகரணங்கள் எரிந்து 10 லட்சத்துக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பான பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles