31.7 C
Colombo
Sunday, November 29, 2026

உயர்தர பரீட்சைத் தாளை கசிய விட்ட ஆசிரியர் கைது!

2023 க.பொ.த உயர்தர விவசாய விஞ்ஞானப் பரீட்சையின் இரண்டாம் பாகம் கசிந்த குற்றச்சாட்டில் அம்பாறையில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் பணிபுரியும் ஆசிரியர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

52 வயதான குறித்த நபர் கைது செய்யப்பட்டு, அம்பாறை நீதவான் நீதிமன்றத்தால் ஜனவரி 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் போது விவசாய விஞ்ஞானப் பரீட்சையின் இரண்டாம் பாகத்தை மும்மொழிகளிலும் பரீட்சைகள் திணைக்களம் இரத்துச் செய்தது.

பரீட்சைக்கு முன்னதாக சமூக ஊடகங்களில் பரீட்சை தாள் கசிந்ததாக எழுந்த சந்தேகம் காரணமாக குறித்த பாட பரீட்சையின் இரண்டாம் பாகத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது.

தற்போது நடைபெற்று வரும் பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் குறித்த பாடத்தின் இரண்டாம் பாகத்திற்கான புதிய பரீட்சை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles