2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஏழு நாள் விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபடவுள்ளனர்.
குழு நிலை அல்லது மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் 19 நாட்களுக்கு நடைபெற உள்ளது, மேலும் 2024 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 13 மாலை 6 மணிக்கு நடைபெறும்.

