29.5 C
Colombo
Friday, October 9, 2026

யாழில் சிறுவர்,பெண்கள் விவகாரத்தை கையாளும் தமிழ் பொலிஸாருக்கு பற்றாக்குறை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் சிறுவர் மற்றும் பெண்கள் விவகாரத்தை கையாளும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை நிலவுவது தொடர்பாக ஆராயப்பட்டது.

குறிப்பாக தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் கொடிகாமம், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் இல்லாமை சுட்டிக்காட்டப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (08)மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாணம் பிராந்தியம் காங்கேசன்துறை பிராந்தியம் என 17 பொலிஸ் நிலையத்தில் 17 ஆண் பொலிஸாரும் 14 பெண் பொலிஸாருமாக மொத்தமாக 31 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காணப்படுகின்றனர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles