23.9 C
Colombo
Monday, October 12, 2026

யாழ். பல்கலை துணைவேந்தர் தெரிவு; பேரவை உறுப்பினர்களுக்கு அழுத்தம்

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தெரிவுக்கான விசேட பேரவை அமர்வு எதிர்வரும் ஜுலை 12 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு அநாமதேயத் தொலைபேசி அழைப்புகள் வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பேரவையின் உறுப்பினர்கள் சிலருக்குத் தெரியாத கைத்தொலைபேசி இலக்கங்களில் இருந்து அழைப்பு மேற்கொள்ளப்பட்டு, “நாங்கள் அரச புலனாய்வுச் சேவையில் இருந்து (எஸ். ஐ. எஸ் ) அழைக்கிறோம். யார் துணைவேந்தராக வர வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? ஏன் அவரை விரும்புகிறீர்கள்? நாங்கள் தான் இரகசிய அறிக்கை கொடுக்க வேண்டும். அதற்காகத் தான் கேக்கிறோம்” என்று பேசப்பட்டதாகப் பேரவை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

தெரிவுக்கான பேரவை  கூட்டம் நெருங்கி வரும் நேரத்தில் இவ்வாறு அழைக்கப்படுவது நல்லதல்ல என பேரவை உறுப்பினர்கள் சிலர் விசனமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles