நேற்றைய போட்டியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையில் வான்கடே மைதானத்தில் இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது. அதன்படி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ருதுராஜ் ஹைக்வாட் மற்றும் டுப்லஸ்ஸிஸ் ஜோடி நிலைத்த அதிரடி ஆட்டத்தினால் அணியை வலுவடையச் செய்தது. துடுப்பாட்டத்தில் டுப்லஸ்ஸிஸ் 9 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் அடங்கலாக 60 பந்துகளில் 95 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். அதேபோல் ருதுராஜ் ஹைக்வாட் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் அடங்கலாக 42 பந்துகளில் 64 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 220 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சார்பில் சக்கரவர்த்தி, நரையின்,ரசல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். அதன்படி 221 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.இதனால் அணி தடுமாறத் தொடங்கியது அதன் பின்னர் இணைந்த தினேஷ் கார்த்திக் மற்றும் ரசல் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டெடுக்க போராடினர். அதிரடியாக ஆடிய ரசல் 3 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் அடங்கலாக 22 பந்துகளில் 54 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடங்கலாக 24 பந்துகளில் 40 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். அதன்பின்னர் தனி ஒருவராக அதிரடியில் மிரட்டிய கம்மின்ஸ் 4 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் அடங்கலாக 34 பந்துகளில் 66 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின்பு அணி சார்பில் எவரும் பிரகாசிக்காத நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 19.1 ஓவர் நிறைவில் 201 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் சென்னை அணியின் சார்பில் தீபக் சஹர் மற்றும் இன்னைக்கி தீபக் சஹர் மற்றும் நெகிடி ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார்கள். சஹர் 29/4 (4),நெகிடி 28/3 (4) விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கிக் கொண்டது. போட்டியின் ஆட்டநாயகனாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டுப்லஸ்ஸிஸ் தெரிவுசெய்யப்பட்டார்.

