24.5 C
Colombo
Wednesday, October 7, 2026

வலுவான நிலையில் பங்களாதேஷ் அணி ; போராடிக் கொண்டிருக்கும் இலங்கை!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்றைய தினம் இடம்பெற்றது. முதல் நாள் ஆட்டம் பல்லேகல மைதானத்தில் இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய பங்களாதேஷ் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் வலுவான நிலையில் காணப்படுகின்றது. பங்களாதேஷ் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஷைப் ஹசன் ஓட்டம் எதையும் பெறாது ஆட்டமிழந்தார். எனினும் பின் வந்த துடுப்பாட்ட வீரர்கள் நிதானமாக ஆடி வருகின்றனர். தமின் இக்பால் 101 பந்துகளில் 90 ஓட்டங்களை (90 (101) 4s*15 )பெற்றுக் கொடுத்து ஆட்டமிழந்தார்.மறுபுறத்தில் சான்டோ 288 பந்துகளில் 126 ஓட்டங்களுடனும் அணியின் தலைவர் மொமினுல் 150 பந்துகளில் 64 ஓட்டங்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதன்மூலம் பங்களாதேஷ் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 90 ஓவர்கள் நிறைவில் 302 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து வலுவான நிலையில் உள்ளது. இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் விஸ்வ பெர்னாண்டோ 2 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles