32.2 C
Colombo
Monday, October 5, 2026

ஜேவிபி பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இந்தியாவுக்கு விஜயம்!

இந்தியாவுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட பிரதிநிதிகள் நேற்று (30) டெல்லி மாநில முதலமைச்சர் ரேகா குப்தாவை சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பில் டெல்லி மாநில கல்வி அமைச்சர் அசீஷ் சூட் உள்ளிட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது, டெல்லி மாநில அரசு தற்போதைய காலகட்டத்தில் மக்களின் தேவைகள் மற்றும் நலனுக்காகவும், டெல்லி நகரின் அபிவிருத்திக்காகவும் முன்னெடுத்து வரும் முக்கிய திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ரேகா குப்தா உள்ளிட்டோர் டில்வின் சில்வா உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தனர்.

குறிப்பாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து சேவையை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் மின்சார பேருந்துத் திட்டங்கள், மின்சார வாகனங்களை ஊக்குவித்தல் மற்றும் மின்னேற்ற வசதிகளை விரிவுபடுத்துதல் தொடர்பாக கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. டெல்லி மாநில அரசு மின்சார பேருந்து போக்குவரத்து முறையை விரிவுபடுத்தி வருவதுடன், 2026ஆம் ஆண்டில் பெருமளவிலான மின்சார பேருந்துகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், பெண்களின் நலன், பொருளாதார வலுவூட்டல் மற்றும் சுயாதீனத்தை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

குழந்தைகள் மற்றும் மக்களின் நலன், கல்வி மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக டெல்லி மாநில அரசு முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்கள் குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டன.

இலங்கையில் தற்போது இடம்பெற்று வரும் சமூக மற்றும் பொருளாதார மாற்றங்கள், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் நலன்புரித் திட்டங்கள் தொடர்பாகவும் டில்வின் சில்வா கருத்துகளைத் தெரிவித்தார்.

குறிப்பாக, நாடு முழுவதும் நிலையான சுற்றுச்சூழல் தூய்மையை ஏற்படுத்துவதற்கும் மக்களின் மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் முன்னெடுக்கப்படும் “Clean Sri Lanka” வேலைத்திட்டம் தொடர்பாகவும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

இரு நாடுகளின் அரசியல் மற்றும் நிர்வாக அனுபவங்கள், மக்கள் நலன் மற்றும் அபிவிருத்தி தொடர்பாக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்த அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதற்கான முக்கிய சந்தர்ப்பமாக இந்தச் சந்திப்பு அமைந்துள்ளது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles