29.5 C
Colombo
Friday, October 9, 2026

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை 2022 ஜனவரி வரை இடைநிறுத்தம்!

சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கையானது நிபந்தனையுடன் 2022 ஜனவரி 20 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

பட்ஜெட்டில் 30 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும் என்று உறுதியளித்ததை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்

இப்பிரச்சினைக்கு தீர்வு காண இன்று(14) நடைபெற்ற ஆசிரியர் சங்கங்களின் கூட்டத்தில் பேசிய ஜோசப் ஸ்டாலின் அரசியல்வாதிகள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்தல், படிவங்களை நிரப்புதல் மற்றும் அவர்களின் கற்பித்தல் பொறுப்புகளுக்கு அப்பாற்பட்ட பிற வேலைகளில் இருந்து ஆசிரியர்கள் தொடர்ந்து விலகி இருப்பார் என்றார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles