தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலையோட்டி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்றையதினம் இரத்ததான முகாமும் நாளையதினம் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டமும் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 12 நாட்கள் பசி இருந்து தாயக மண்ணுக்காக தன்னுயிரை தியாகம் செய்த தியாகதீபம் திலீபனது 39ஆவது வருட நினைவு தினத்தையொட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் நாளை வெள்ளிக்கிழமை ஓர் நாள் காலை முதல் மாலை வரை அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டத்தில் அனைத்து தரப்புக்களையும் பஙகுபற்றி வலு சேர்க்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலையோட்டி இன்றையதினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் உள்ள மாணவர் வளாகத்தில் இரத்ததான முகாமும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

