கொக்குவில் மேற்கு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய இளைஞர்களின் ஏற்பாட்டில் கொக்குவில் மேற்கு சனசமூக நிலையத்தில் இன்றையதினம் இரத்ததான முகாமொன்று நடைபெற்றது.
https://www.facebook.com/share/v/17cMZ4gTWj/
மறைந்த துரைராசா உதயசங்கரின் முதலாம் ஆண்டு நினைவாக குறித்த இரத்த தான முகாம் ஆலய இளைஞர்களின் ஏற்பாட்டில் இன்று காலை முதல் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் விருந்தினராக கலந்து கொண்டு இரத்த தான முகாமை ஆரம்பித்து வைத்ததுடன், இளையோர் பலரும் இரத்த தான முகாமில் கலந்து கொண்டனர்.



