கொரோனா காரணமாக நாட்டில் திருமணங்கள் தடை செய்யப்பட்டிருந்தாலும், திருமணப் பதிவுகளுக்கு அனுமதி வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் டிஐஜி அஜித் ரோஹனா தெரிவித்தார்.
திருமணம் செய்துகொள்ளும் தம்பதியினர், பெற்றோர், இரண்டு சாட்சிகள் மற்றும் திருமணப் பதிவாளர் ஆகியோருடன் மட்டுமே திருமணப் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
அத்துடன் மறு அறிவித்தல் வரும் வரை இலங்கை முழுவதும் இன்று முதல் தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 04 மணி வரை தினசரி தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காணப்படும்.
ஊரடங்கை மீறுபவர்களைக் கண்டறிய சிறப்பு நடவடிக்கைகள் அமுலில் இருக்கும் என்றார்.
அதேபோல முகக் கவசத்தை அணியாத மற்றும் உரிய வகையில் அணியாதவர்கள் இன்று முதல் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்படும் நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி சிரேஷ்ட பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.
இது தொடர்பில் நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

