33.4 C
Colombo
Sunday, November 29, 2026

வடக்கு ஆளுநர் தொடர்பாக முகநூலில் பதிவிட்ட ஊடகவியலாளரிடம் பொலிஸார் விசாரணை!

காணொளியாக பார்க்க……

https://fb.watch/pfXDdgadUM/?mibextid=RtaFA8

வடக்கு ஆளுநர் மற்றும் கிழக்கு ஆளுநர்களை ஒப்பிட்டு, பதிவிட்ட முகநூல் பதிவு தொடர்பாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளரொருவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

சுயாதீன ஊடகவியலாளர் சொர்ணலிங்கம் வர்ணனிடமே யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸார் சனிக்கிழமை (30) வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

வாக்குமூலம் வழங்கிய பின்னர் கருத்து தெரிவித்த குறித்த ஊடகவியலாளர், பொலிசாரால் வழங்கிய அழைப்புக் கடிதத்தில் முறைப்பாடு என்ன என்பதும் முறைபாட்டாளர் யார் என்பது தொடர்பிலும் தெளிவுபடுத்தப்படவில்லை.

வாக்குமூலம் வழங்குவற்கு முன்னர் வடமாகாண ஆளுநரின் செயலாளரின் கையொப்பத்துடன் வழங்கப்பட்ட கடிதப் பிரதியை பொலிசார் எனக்கு காண்பித்தனர்.

எனது முகநூலில் பதிவிட்ட கிழக்கு மற்றும் வடக்கு ஆளுநரின் செயற்பாடுகளை ஒப்பிட்டு எழுதிய பதிவை ஆளுநரின் செயலாளர் வடமாகாண பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாட்டுக்காக வழங்கியிருந்தார்.

அதனடிப்படையில் என்னிடம் வாக்குமூலத்தை கேட்ட நிலையில் ஒரு ஊடகவியலாளர் என்ற ரீதியில் வடக்கு ஆளுநரினால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சேவை கிழக்கு ஆளுநரை ஒப்பிடும் அளவில் போதாது என்ற விடயத்தை கூறினேன்.

கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை கட்டுப்படுத்தம் நோக்கிலும் ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நோக்கிலும் வடக்கு ஆளுநரின் செயலாளர் செயற்பட்டுள்ளார் – என்றார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles