இருபாலையில் கணவன் மனைவியை வாளால் வெட்டி காயப்படுத்தி தலைமறைவாகியிருந்தவர் கோப்பாய் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார்.
இருபாலை மடத்தடி பகுதியில் கடந்த வாரம் வீட்டில் இருந்த கணவன் மனைவியை வெட்டி காயப்படுத்தி கடந்த பத்து நாட்களாக தலைமறைவாக இருந்தவர் நேற்றைய தினம்(11) கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்,
வலைப்பாடு பகுதியில் தலைமறைவாகியிருந்த சந்தேக நபரே கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாள் ஒன்றும் சந்தேக நபரின் வீட்டின் கோழி கூட்டுக்குள் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிசார் தெரிவித்தனர்.

