ஐம்பது ஓவர்களை கொண்ட ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 2003 ம் ஆண்டுக்கு பின்னர் இரண்டாவது முறையாக அவுஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்தியா.
1975,1987,1996,1999, 2003, 2007, 2015, 2023 என 8வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ள அவுஸ்திரேலியா இதுவரை ஐந்து உலக கிண்ணத்தை வென்றுள்ளது.
இதேவேளை உலககோப்பை தொடரில் இந்திய அணி 1983,2003,2011,2023 என 4வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இரண்டு முறை உலக கிண்ணத்தை வென்றுள்ளது.
2023 உலக கிண்ண கிரிக்கெட் சம்பியனை தீர்மானிக்கும் இறுதி போட்டியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19) இந்தியாவின் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியாவை எதிர்கொள்கிறது அவுஸ்திரேலியா.

