31.7 C
Colombo
Sunday, November 29, 2026

சீனத் தூதுவரின் வடக்கு விஜயம் இந்தியாவை சீண்டுகிறதா?

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் பல்வேறு இடங்களுக்கும் விஜயம் செய்து பார்வையிட்டதுடன் சீன அரசின் உலர் உணவுப் பொதிகளையும் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கை மற்றும் சீனா பௌத்த நட்புறவு சங்கமும், சீனாவின் புத்த சங்கம் இணைந்து சீனாவில் உள்ள பௌத்த மக்களால் இலங்கையிலுள்ள வறிய மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் நடந்த நிகழ்வில் இன்று காலை தெரிவு செய்யப்பட்ட 300 குடும்பங்களுக்கு உலர் உணவுபொதிகளை சீனத் தூதுவர் வழங்கி வைத்தார்.

நெடுந்தீவு மக்களுக்கு 500 உலருணவுப் பொதிகள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் சீனத் தூதுவரால் வழங்கி வைக்கப்பட்டது.

நாவற்குழி ஸ்ரீ சமித்தி சுமன விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் சிங்கள மற்றும் தமிழ் குடும்பங்களுக்கு 250 உலருணவுப் பொதிகளை சீனத் தூதுவர் வழங்கி வைத்தார்.

யாழ்ப்பாணத்தில் பழைய கச்சேரி கட்டடத் தொகுதி, இலங்கையின் முனையான பருத்தித்துறை சக்கோட்டை பகுதிக்கும் சீனத் தூதுவர் விஜயம் செய்து பார்வையிட்டார்.

இந்தியாவுக்கு மிக அண்மையில் உள்ள பருத்தித்துறை சக்கோட்டை பகுதிக்கு சீன தூதுவர் சென்றமை பல கேள்விகளை எழுப்புகிறது. கடந்த 2021ம் ஆண்டு சீனத் தூதுவர் வடக்கிற்கு வந்தபோதும் சக்கோட்டை முனைக்கு சென்று இந்தியா எவ்வளவு தூரம் என கேட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் பழைய கச்சேரியை சீன நாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதாக கடந்த காலங்களில் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சீனதூதுவர் பார்வையிட்டமை பாரிய சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

இந்திய நிதி அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழு இலங்கைக்கு வந்து திருகோணமலை,யாழ்ப்பாணம் என சென்ற சில நாட்களுக்குள் சீனத் தூதுவரின் வடக்கு விஜயம் பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

யாழ்ப்பாணத்திற்கும், தமிழகத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் இலங்கைக்கு சொந்தமான மூன்று தீவுகளில் சீனாவினால் முன்னெடுக்கப்படவிருந்த மூன்று மின்சக்தி திட்டங்களை சீனா கடந்த காலங்களில் கைவிட்டது.

இந்நிலையில் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் நயினாதீவு உள்ளிட்ட தீவகப் பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles