28.9 C
Colombo
Friday, August 21, 2026

சேர் ஹென்றி ஸ்டீல் ஓல்கட்டின் 116 ஆவது நினைவு தினம் நாளை

இலங்கையின் தேசிய, சமய, கல்வி மறுமலர்ச்சியின் முக்கிய தலைவராக விளங்கிய சேர் ஹென்றி ஸ்டீல் ஒல்கட் அவர்கள் 116 ஆண்டுகளுக்கு முன்னர் பெப்ரவரி 17ஆம் திகதி மறைந்தார்.

ஓல்கட் 1832 இல் அமெரிக்காவில் பிறந்தார். சட்டத்தரணியாகவும் இராணுவ அதிகாரியாகவும், விவசாயஆராய்ச்சியாளராகவும் பணியாற்றிய அவர், 1875 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பரமவிஞ்ஞானார்த்த நிறுவனத்தை ஆரம்பித்து மதப் பணிகளை மேற்கொண்டார்.

வணக்கத்திற்குரிய மிகெட்டுவத்தே ஸ்ரீ குணானந்த தேரர் மேற்கொண்ட பாணந்துறைவாதத்தின் விளைவாக 1880 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி இலங்கைக்கு வந்த ஓல்கட் அவர்கள் கொழும்பில் பரமவிஞ்ஞானார்த்த பௌத்த சங்கத்தை நிறுவி இலங்கையில் பௌத்த கல்வியை மேம்படுத்தும் விசேட பணியை மேற்கொண்டார்.

இலங்கையில் பௌத்த அரநெறிப் பாடசாலைகளை ஆரம்பித்தல், கொழும்பு ஆனந்தா வித்தியாலயத்தை ஸ்தாபித்தல், வெசாக் பௌர்ணமி தினத்திற்கு விடுமுறை வழங்கல், பௌத்த கொடி உருவாக்கம் போன்றவை ஓல்கட் அவர்களின் தலையீட்டில் மேற்கொள்ளப்பட்டன.

1907 பெப்ரவரி 17 ஆம் திகதி ஓல்கட் இந்தியாவில் காலமானார். அவர் மறைந்து நாளை (17) உடன் 116 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

 

 

 

 

 

 

 

 

 

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles