31.7 C
Colombo
Sunday, November 29, 2026

இந்தியாவில் இருந்து வந்தபோது ரிஐடியால் கைதானவர் மல்லாகம் நீதிமன்றத்தினால் விடுவிப்பு!

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பிய வேளையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நபர், மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டார்.

வழக்கு விசாரணைகளுக்காக இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டது.

குறித்த வழக்கை நவம்பர் 12ம் திகதிக்கு ஒத்திவைத்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – மாசியப்பிட்டி, அம்மன் கோவிலடி பகுதியைச் சேர்ந்த கந்தசாமி கிருஷ்ணகுமார் என்ற 50 வயதானவரே இவ்வாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டார்.

கடந்த 26 ஆம் திகதி இந்தியாவின் தமிழகத்தில் இருந்து விமானம் மூலம் இலங்கை திரும்பிய போதே, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட கிருஷ்ணகுமார் கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு, 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்திருந்தார்.

அதன் பின்னர் திருச்சி சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், அண்மையில் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையிலேயே தற்போது இலங்கைக்கு திரும்பியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles