31.7 C
Colombo
Sunday, November 29, 2026

செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று மீண்டும் ஆரம்பம்!

இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளவற்றில் மிகப்பெரிய மனித புதைகுழியான செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றையதினம் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
கடந்த ஜீன் மாதம் 23ம் திகதி செம்மணி மனித புதை குழியின் மூன்றாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி நிறைவுக்கு வந்த நிலையில் அடுத்த பகுதி அகழ்வு பணிகள் யாழ்ப்பாணம் நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் கடந்த ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகி 09 நாட்கள் நடைபெற்ற முதலாம் கட்ட அகழ்வு பணிகளின் போது, 19 மனித என்புகூடுகள் மீட்கப்பட்டன.
அதனை அடுத்து இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு , செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி வரையிலான 45 நாட்கள் நடைபெற்ற அகழ்வு பணிகளின் போது , முதலாம் கட்டத்தில் அகழ்ந்து எடுக்கப்பட்டு 19 என்பு கூடுகள் உட்பட 240 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டன.
இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக 53 நாட்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 12நாட்கள் நடைபெற்று கடந்த மே மாதம் 09ஆம் திகதி வரையில் 21 என்பு கூடுகள் மீட்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களில் மீட்கப்பட்ட என்பு கூடுகளுடன் சேர்ந்து 261 என்பு கூடுகள் மீட்கப்பட்டன
அந்நிலையில் மூன்றாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த ஜூன் மாதம் ஆரம்பமாகி 22 நாட்கள் நடைபெற்ற நிலையில் தற்காலிகமாக அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டு , இன்று மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதுவரையிலான முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளில் 412 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 409 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய அகழ்வின் போது தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர், தடயவியல் பொலிஸார், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள்,
நல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் அகழ்வு பணிகளில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles