இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் இன்று (20) கொழும்பில் சந்திப்பு இடம்பெற்றது.
கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் மாலை 5 மணி தொடக்கம் 5.30 மணி வரை இந்த சந்திப்பு நடந்தது.
மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், க.வி.விக்னேஸ்வரன், சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், செ.கஜேந்திரன், சாணக்கியன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பில், கலந்து கொண்ட தமிழ் தரப்பினர்கள், மீண்டும் பதவியேற்ற ஜெய்சங்கருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வுக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கையெடுக்க கோரிக்கை விடுத்தனர். 

