23.9 C
Colombo
Sunday, October 11, 2026

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்? திருகோணமலையில் இன்று வாக்கெடுப்பு 

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு திருகோணமலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெறவுள்ளது.

திருகோணமலை நகர மண்டபத்தில் தேர்தல் காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி, இலங்கை தமிழரசு கட்சியின் பொது சபை உறுப்பினர்கள் 330 பேருக்கும் மேற்பட்டவர்கள் இன்று வாக்களிக்கவுள்ளனர்.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் என மூவர் தேர்தலில் போட்டியிட பிரேரிக்கப்பட்டாலும் இருவரிடமே போட்டி நிலவும் என தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தனது வாக்கை சிறீதரனுக்கே அளிக்கபோவதாக சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தேர்தல் சுமூகமாக நடைபெற்றால் இன்று மாலை புதிய தலைவர் யார் என்பது தெரியவரும்.

இரகசிய வாக்கெடுப்பின் முடிகளுக்கமைய தெரிவாகும் புதிய தலைவர் எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறும் கட்சியின் தேசிய மாநாட்டின்போது உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்பார்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles