வடக்கு கடற்பரப்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட 40 இந்திய மீனவர்களையும் விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
நல்லெண்ண அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.
இதற்கமைய, நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் குறித்த 40 இந்திய மீனவர்களும் விடுவிக்கப்படுவார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதனடிப்படையில், மன்னாரில் 2 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 18 மீனவர்களும் பருத்தித்துறையில் ஒரு படகுடன் கைது செய்யப்பட்ட 10 மீனவர்களும் ஊர்காவற்றுறையில் 3 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களும் விடுவிக்கப்படவுள்ளனர்.
இதேவேளை, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இராமேஸ்வர விஜயத்தை முன்னிட்டு மீனவர்கள் விடுவிப்பு இடம்பெறுவதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இது தொடர்பில் இந்திய வௌியுறவுத்துறை அமைச்சினால் இலங்கையிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தமது உறவினர்களை விடுவிக்குமாறு இராமேஷ்வரம் மீனவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

