வடக்கு புகையிரதப் பாதையில் மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான மார்க்கம் ஞாயிற்றுக்கிழமை (07) முதல் தற்காலிகமாக மூடப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
மஹவ மற்றும் அனுராதபுரத்திற்கு இடையிலான அபிவிருத்தி நடவடிக்கைக்காக 06 மாத காலத்திற்கு இந்த மார்க்கம் மூடப்படும் என புகையிரத பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே குறிப்பிட்டார்.
அதன்படி ஞாயிற்றுக்கிழமை (07) முதல் கொழும்பில் இருந்து மஹவ மற்றும் அனுராதபுரத்தில் இருந்து காங்கேசன்துறை வரை மட்டுமே புகையிரத சேவைகள் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

