25.6 C
Colombo
Thursday, October 8, 2026

செல்வச்சந்நிதி ஆலயத்தின் கொடியேற்ற திருவிழா

யாழ்ப்பாணம் – தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த கொடியேற்ற திருவிழா சனிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் ஆரம்பமானது.

சந்நிதி ஆலயத்தில் மதியம் 1.19 மணிக்கு கொடியேற்றப்பட்டு திருவிழா உற்சவம் இடம்பெற்றது.

அன்னதான கந்தன் என்று அழைக்கப்படும் சந்நிதியானின் திருவிழாவில் அதிகளவான பக்தர்கள் முதல் நாளிலே கலந்து கொண்டு காவடி எடுத்தும் பால் செம்பு எடுத்தும் நேர்த்திக்கடன்களை நிறைவு செய்தனர்.

பதினாறு நாட்கள் இடம்பெறும் சந்நிதி முருகன் திருவிழாவில் செப்ரெம்பர் 01 ஆம் திகதி பூங்காவனத் திருவிழாவும் , கைலாய வாகன உற்சவம் செப்ரெம்பர் 02ஆம் திகதி இடம்பெறவுள்ளது, சப்பரத் திருவிழா திருவிழா செப்ரெம்பர் 09 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இரதோற்சவம் செப்ரெம்பர் 06 ஆம் திகதியும், தீர்த்தத்திருவிழா செப்ரெம்பர் 07ஆம் திகதியும் அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

அமாவாசை அற்றுப்போகும் நேரத்தில் சந்நிதியானின் கொடியேற்றப்படும் அவ்வேளை கந்தனின் அற்புதத்தால் வள்ளிக்கொடி தோன்றும் இதனையே கொடி ஏற்ற திருவிழா என்று பக்தர்கள் கொண்டாடுவர்.

Jaffnagallery செய்திகளை உடனுக்குடன் அறிய எமது Whatsapp குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யுங்கள்

Related Articles

- Advertisement -

Latest Articles